பக்கம்:அண்ணா காவியம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல்வர்


அண்ணாவும் பதவியேற்றார், மார்ச்சுத் திங்கள் :ஆறாம்நாள், இராசாசி மண்ட பத்தில்!

கண்ணாரக் காண வந்த தோழ ரெல்லாம்
காவலரால் தடுத்துவைக்கப் பட்டி ருந்தார்.

"மண்ணாளும் மகராசன் வாழ்க!" என்றே
மனமார முழக்கமிட்டார், வெளியே நின்று!

அண்ணாவோ வண்டியேறிப் போய்வி டாமல்...
அனைவரையும் கைகுலுக்கி வணக்கம் செய்தார்!




அன்றுமாலை இராசாசி, காம ராசர்,
ஆண்டபக்த வத்சலனார் அனைவர் பாலும்

சென்று மாலை சூட்டிவந்தார்! பெரியார் மட்டும்
திருச்சியிலே இருந்ததனால், மறுநாள் போனார்,

ஒன்றுமே ஓடவில்லை; எதிர்த்த தன்னை
ஒதுக்காத மகன்வரவால் வெட்கங் கொண்டு

'நன்று.நன்று' என்றுரைத்தார் தந்தை! மீண்டும்
நல்லவண்ணம், நீடித்த பிணைப்புக் கண்டோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/148&oldid=1080014" இலிருந்து மீள்விக்கப்பட்டது