பக்கம்:அண்ணா காவியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதல்வர்
149


மதுரை அண் ணாமலைப் பல்கலைக் கழகங்கள்

அதுவரை அறியாப் பட்ட மளிப்புரை

வழங்கிப் புதிய வரலாறு படைத்தார்!

அன்னையாம் தமிழை அரியணை ஏற்றிட

முன்னரோ பின்னரோ கண்ணுறா வண்ணமாய்

இரண்டாம் உலகத் தமிழ்மா நாட்டினில்

திரண்ட மக்களும் தேறா மக்களும்

புரிந்து கொள்ளவே புரிந்தனர் செயலே!

ஆர்வம் பெருகிய ஊர்வல நேர்த்தியும்

சீர்தமிழ்ச் சான்றோர்க்குச் சிலைகள் எடுத்ததும்

விந்தையாய் நோக்கிய இந்தியத் தலைவர்

சாகீர் உசேனும் 'ஒகோ' என்றனர்!

இந்தித் திணிப்பினை என்றும் ஏற்றிடோம்!

செந்தமிழ் ஆங்கிலம் சீரிய இரண்டுமே

ஆட்சி மொழியாய் அமைந்திடும் இங்கென

மாட்சியாய்ச் சட்ட மன்றில் மொழிந்த

காட்சிக் குவமை காட்டஇய லாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/151&oldid=1080020" இலிருந்து மீள்விக்கப்பட்டது