பக்கம்:அண்ணா காவியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நோய்வீழ் படலம்
151

மருத்துவர்கள் ஆராய்ந்து பார்க்கா வண்ணம்
மறைப்பதனால் நோய்வலிமை குறைந்தா போகும்?

பொறுத்தருளும் ஏசுபிரான் சிலுவை போலப்
பொல்லாங்கைத் தமக்குள்ளே சுமந்த தால்தான்

திருத்தமுற மேல்நாட்டில் சோதிக் காமல்
தீங்குடனே திரும்பிவந்தார் அண்ணன்! இங்கே

பொருத்தமுடன் பட்டமளித் துயர்த்தும் போதும்
போய்ப்பெறவும் இயலவில்லை நலிந்து விட்டார்!




தளிர், இலையாய்ப், பழுப்பாகிச், சருகாய் மாறல் :தவிர்க்கவொண்ணா இயற்கைவிதி எனினும்,
அண்ணா,

குளிர்பதன அறைவெறுத்துச் சொந்த வீட்டில் :குடியிருக்கும் கொள்கைவழி நிற்ப தற்கே

அளித்தவிலை மிகப்பெரிதாம்; அரிதாம்; அந்தோ!
அவர்உயிரைப் பணயமிடல் என்ன நீதி?

எளிமைமிகத் தேவைதான்! எளிதில் கிட்டா
எம்தலைவன் வாழவேண்டும், யாங்கள் வாழ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/153&oldid=1080028" இலிருந்து மீள்விக்கப்பட்டது