பக்கம்:அண்ணா காவியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

அண்ணா காவியம்


எப்படியோ தெரிந்துவிடத்-தமது நோயின்
இயல்புமிக முற்றியதும் புரிந்து கொண்டு,

தப்பிக்க முயன்றிட்ட தம்பி யர்க்குத்
தாமாகத் தென் புதந்தார்; வேலூர் செல்ல

ஒப்பவில்லை! உடனேதான் அடையாற் றில்போய்
ஒழுங்குசெய்தார் ஒரேநாளில் கலைஞர்! அங்கே

எப்படித்தான் விறுவிறுப்பாய் வழக்கம் போல
ஏறுநடை நடந்துசென்றார்: கடைசி யாக!




சித்திரங்கள் தீட்டிடுவார்; சிரித்து, பேசி,
செல்பவர்கள் திகைப்படையத் துயர்ம றைப்பார்!

சத்திரச் சிகிச்சையினை வெற்றி யோடு (?)
சடுதியிலே முடித்து, மில்லர் திரும்பிச் செல்லப்...

பத்திரமாய் அண்ணனுடல் பாது காக்கப்
படைவரிசை போற்பலராய் மருத்து வர்கள்

தமங்கே நின்றதெல்லாம் கனவா? சென்னை
நிறைந்திடவே பறந்துவந்த தமிழ மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/156&oldid=1080036" இலிருந்து மீள்விக்கப்பட்டது