பக்கம்:அண்ணா காவியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

அண்ணா காவியம்


இப்படியெல் லாம்புலம்பும் எளிய தொண்டர்
இருவிழிகள் வறண்டதுதான் மிச்சம்! நாட்டில்

ஒப்பாரும் மிக்காரும் இல்லா வண்ணம்
உயர்ந்துவிட்ட எம்தலைவன் ஒய்ந்தே போனான்!

பிப்ரவரி இரண்டாம்நாள் நடுயா மத்தில்
பேரறிஞன் பாரதிரப் புறப்பட் டானே !!!

ஒப்பாரி வைத்திடவும், நாம், பெண் அன்றே!
உரத்தகுரல் அழுவதற்கும், குழவி அன்றே!




அங்கிங்கெ னாதபடி எங்கும் சுற்றி
அருமைமிகு தமிழினத்தின் பெருமை பாடும்

சங்கீத நாதவொலி நிலைத்து நிற்கத்,
தங்குதடை யில்லாத பாசம் ஊட்டிக்

கங்குகரை காணாத அன்பு மேகம்
கருணைமழை பொழிவதையே நிறுத்திக் கொண்டு

நுங்கம்பாக் கத்திலுள்ள சிறிய வீட்டில்
நுடங்கிவிட்ட கொடுமையென்ன சொல்வோம்:அந்தோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/158&oldid=1080223" இலிருந்து மீள்விக்கப்பட்டது