பக்கம்:அண்ணா காவியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அவலம் சூழ் காதை


அடித்துப் புரண்டு துடித்துத் துவண்டு

வெடித்த குண்டால் வெருண்ட பான்மையில்

பதறிச் சிதறிப் பாய்ந்து தோய்ந்து

கதறி முட்டி மோதிக் கண்ணிர்

அருவிப் பாய்ச்சலாய்ப் பெருகி ஓடிட

உருவங் குலைந்தே உடைகள் கழலத்

தலையில் முகத்தில் தம்கையால் அறைந்து

நிலையை மறந்து நெட்டுயிர்ப் பெய்தி

மூச்சு விடுதலை முற்றிலும் துறந்து

பேச்சும் புலம்பலும் பிழைபட எழுப்பிக்

குய்யோ முறையோ அய்யோ சாமியென்று

அலறி வீழ்வதால் உலரும் நாவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/159&oldid=1080226" இலிருந்து மீள்விக்கப்பட்டது