பக்கம்:அண்ணா காவியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

அண்ணா காவியம்


புலரும் பொழுதைப் போஎனச் சபித்துத்

தளிரும் இலையும் சருகும் பழுப்புமாய்க்

குளிரில் நடுங்கும் குழவியர் கிழவியர்

மங்கையர் மடந்தையர் அரிவையர் தெரிவையர்

தங்கையர் தாய்மார் சிங்க ஏறுகள்

யாவரும் கூடினர் மேவிடும் ஆவலால்

ஆவியே அனைய அண்ணனைக் காணவே!

விழுவதும் அழுவதும் தொழுவதும் வீழ்ந்தவர்

எழுவதன் முன்னே ஏறி மிதிப்பதும்

என்னுயிர் போயினும் அண்ணனைக் கண்டு

பின்அது போனால் போகட் டும்என

முன்புசெல் வோரைப் பின்புற மிருந்து

வன்புடன் தள்ளினும் அன்புதான் அன்றோ?



எள்ளினைப் போட்டால் எண்ணெய் ஆம்:கண்

கொள்ளாக் கூட்டம்; குவலயம் ஒன்றாய்ச்

சென்னையில் திரண்டதோ? அண்ணனின்உடலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/160&oldid=1080228" இலிருந்து மீள்விக்கப்பட்டது