பக்கம்:அண்ணா காவியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புனிதனைத் தேடி


"கடமை, கண்ணியம், கட்டுப் பாடு" இவை

உடைமையாய்த் தந்த ஒப்பிலா முச்சொல்!

அடக்கமாய்ப் பணிகள் தொடக்குதல்; "என்ன

கிடைக்கும்?" எனப்பயன் கேட்பது தவறு!

கட்சியால் எனக்குக் கடுகும் வேண்டா;

கட்சிக் கென்னால் கணிவதும் யாதெனக்

கடமையே கருத்தாய் இடைவிடா துழைத்தபின்

திடமிக உரிமையைத் தேடுதல் நன்று!



மடமையும் வறுமையும் மாய்த்துச் சமூகத்தின்

இடத்தினில் நீதி ஏற்படச் செய்தல்!

எத்தனை இழப்பும் இன்னலும் ஏற்றிடச்

சித்தமா யிருத்தல்! சித்திர வதைசிறைக்

கொடுமைக ளாலும் கொள்கை நழுவா

விடா முயற்சியால் மேற்செல விரைந்திடல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/166&oldid=1080250" இலிருந்து மீள்விக்கப்பட்டது