பக்கம்:அண்ணா காவியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புனிதனைத் தேடி
167

மொழிந்த வள்ளுவன் மூதுரைக்கு மேலும்

கழிபெரும் பொழிப்புரை கழறினன் அண்ணன்!

கொல்லும் பகைவனும் கூட நல்லுரை

சொல்லுதல் இயலும், சுவையுடன் இருப்பின்

கொள்ளுதல் தீமையோ? கூடிக் கெடுத்திடும்

உள்ளுறும் பகையினும் வெள்ளிடை மலையாய்

மாற்று முகாமில் வதியும்சான் றோரை

ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் நன்மையே!

"மறப்போம் மன்னிப் போம்” என மாண்புடைச்

சிறப்பினால் உயர்ந்த செம்மல் உரைத்தனர்!

பெரிய மனிதர் சிறிய தவறுகள்

பெரிய மனிதருக்குரிய முறையிலே

புரிகிறார்; நமக்குப் புரிகிற தெனினும்,

தெரிகிற உண்மையை த் தீப்போல் அணைத்துக்

குளிரச் செய்வதே குணமெனுங் குன்றுமேல்

ஒளியாய் நிற்போர் அளியாம்! வள்ளுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/169&oldid=1080274" இலிருந்து மீள்விக்கப்பட்டது