பக்கம்:அண்ணா காவியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

அண்ணா காவியம்


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்று நன்றுள்ளக் கெடுமென உரைத்தனர்!

மறதியால் வருவது மகத்தான இன்பம்,

மறதியில் லாவிடில் மனிதன் விலங்கினம்!

மன்னிப் பருளும் மனம்பெறும் அமைதி

என்னபே ரின்பம்? ஈடினை யற்றதாம்!

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போ

தாகூர் வரைந்த தகைகிறை கவிதையும்

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"

திருமூலர் சொன்ன திருமங் திரமும்

நமதண் ணன் அரும் சமதர்ம கெறியாய்

எளிதாய் வழங்கிய கழிபெருங் கொடையே!


இஃதே எமதரும் இலட்சிய மென்று

பல்லாற் றானும் பணியாற் றுதற்கே

நின்வழி நின்று நன்மை பெருக்கஇவ்

அரசினை அமைத்தோம்; விரைவாய்த் திட்டம்

நிறைவேற் றிடவும் நெறிமுறை வகுத்தோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/170&oldid=1080276" இலிருந்து மீள்விக்கப்பட்டது