பக்கம்:அண்ணா காவியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

அண்ணா காவியம்


ஒளிதனை உமிழும் உன் விழிமலர் கண்டும்,

களிப்பினைச் சிந்தும் உன் கனியிதழ் பேசிடும்

அமுதத் தமிழ்மொழி ஆர்வமாய்க் கேட்டும்,

குமிழ்மூக் குப்பொடி கொள்வதை ரசித்தும்,

கவிதை எழுதெனக் கட்டளை நீயிடத்

தவித்திடும் என்னைத் தட்டித் கொடுக்கும்நின்

கைம்மலர் வருடியும், கழுத்தினில் நோயிதைச்

செம்மையாய்த் தே'யெனத் தைலந் தடவியும்,

விருந்தில்என் அருகே அமர்ந்துவே டிக்கை

புரிந்தெனை அருந்திடச் செய்யுமுன் போக்கும்,

என்திரு மணத்தில் இடர்எழத் தவிர்த்து,

முன்னி ருந்துநீ முடித்ததோர் மொய்ம்பும்,

நின்னெதிர் வருங்கால் புன்னகை புரிந்தே

என்முகம் பாராது முன்வரும் தொந்தியைப்

பார்த்துச் சிரிக்குமுன் நேர்த்தியும் நினைத்தே

ஆல்போல் தழைத்தநின் அடியினில் விழுதாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/172&oldid=1080280" இலிருந்து மீள்விக்கப்பட்டது