பக்கம்:அண்ணா காவியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாயிரம்


'ஆண்டவனே!' என, நின்னை அறிந்த பின்னர்

அடியேனின் நெஞ்சத்தில் பக்தி கொண்டு

வேண்டியது கிடையாது! தாங்க வொண்ணா

வேதனையில் மூழ்கிநின்று துடித்த போதும்

மூண்டெழுந்த பேரன்பால் 'அண்ணா!' என்றே

முணுமுணுப்பேன்! கனத்திருக்கும் எனதுள் ளத்தை

ஆண்டவனே! என்றென்றும் ஆளும் கோனே!

அருள்புரிக; பொருள்தருக; நினையே பாட!


மக்களர சென்னுமொரு சொல்லுக்கேற்ற

மாண்புடனே தமிழரசைக் காண்ப தற்குத்

தக்கபல அடித்தளங்கள் அமைத்துத் தந்த

தன்னலமில் லாதஒரே தமிழ்த்த லைவன்

எக்கணமும் எம்மனத்தில் நீங்கா துள்ள

இறையான பேரறிஞன் நின்னைப் பற்றி,

நெக்குருகி நெகிழச்செய் காவி யத்தை

நெடிதாகப் படைத்திடவே நண்பர் கேட்டார்!

}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/21&oldid=1078527" இலிருந்து மீள்விக்கப்பட்டது