பக்கம்:அண்ணா காவியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

20


கரும்புத்தின்னக் கசந்திடுமோ? கால்நூற் றாண்டாய்க்

கவிபாட முனைந்ததெலாம் நின்னால் அன்றோ?

விரும்புகின்றாய் என்றறிந்தே இயற்றி வந்தேன்.

விளையாட்டுத் தனமாகக் கிறுக்கி னாலும்,

அரும்பிநின்ற என்னார்வம் மலரும் வண்ணம்

அடிக்கடிநீ ஊக்கியதை மறந்தா போவேன்!

பெரும்பேறு நீசுவைக்க எழுது கோலைப் -

பிடித்ததுதான்; தடுத்தாண்ட இறையே, வாழ்த்து!


கொவ்வைச்செவ் வாயிலூறு குறுஞ்சி ரிப்பால்,

குதப்புகின்ற வெற்றிலையை ஒதுக்கிக் கொண்டே

இவ்வுலகத் தமிழ்மக்கள் இதயம் வென்ற

இணையற்ற தனித்தலைவா! எனைம தித்தே,

எவ்வளவோ நீதந்த தலைப்பின் கீழே

எழுதியுள்ளேன்! நீயேவோர் தலைப்பாய் ஆனால்

செவ்விளநீர் பருகுவது போல அன்றோ?

செம்மையுறத் துவங்குதற்கு முயல்கின் றேன்.நான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/22&oldid=1078542" இலிருந்து மீள்விக்கப்பட்டது