பக்கம்:அண்ணா காவியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

26

மக்களின் வாழ்க்கைச் சிக்கலை அறுக்கத்

தக்க அறிவுரை மிக்க வழங்கின!

எனினும், என்றும் இனிதாய், எளிதாய்,

மனிதக் குலத்தினர் மனத்துட் கொள்ளவும்,

இல்வாழ் வார்முதல் பல்வேறு துறைகளில்

செல்வார் அனைவரும் செயல்பட் டொழுகவும்,

மன்னர், அமைச்சர், நண்பர், பகைவர்,

நன்னடைச் சிறியோர், நாடறிந்த பெரியோர்,

காதலர், காமுகர், கோதிலாத் துறவியர்,

சீதளச் செம்முக மாதரார்-யாவரும்

படித்துணர ஏற்ற இடித்துரை நிரம்பிட...

வடித்த ஈரடிப் படித்தேன் குறட்பா

அருளிய வள்ளல் திருவள்ளுவர்போல்

மருளகற் றவல்ல பெருமான் பிறரிலர்!


ஏசு பிறந்து மாசிலா நெறியைக்

காசினி யோர்க்குக் கழறிடு முன்னரே

வாழ்வு முறைகளை வகுத்துத் திட்டமாய்

ஆழ்பொருள் நிறைந்திட, அனுபவ உண்மைகள்

ஈரா யிரமாண் டிழிந்த பின்னரும்

சீரா யின்றும் சேர்ந்திடும் வண்ணமாய்த்

நந்து சிறந்த எந்தைமூ தாதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/28&oldid=1078565" இலிருந்து மீள்விக்கப்பட்டது