பக்கம்:அண்ணா காவியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தோற்றம்

அற்புதங்கள் நிகழவில்லை! ஆகா யத்தில்

அதிசயமாய்ப் புதியவொளி தோன்றிற் றென்று

கற்பனையாய்க் கவிஞருமே பாட வில்லை!

கதைக்கின்ற பண்டிதர்க்கு வேலையில்லை!

பொற்புடைய காஞ்சிமண்ணின் பெருமை மேலும்

பொலிவடைய, வலிவிழந்த தமிழ கத்தின்

நற்பயனாய், நடராசன்-பங்கா ரம்மாள்

நயந்தபடிப் பிறந்ததேஓர் ஆண்கு ழந்தை!



செம்புடம்புச் சிலைவடிவு பெற்ற பிள்ளை

சிறப்பாக இத்திங்கள் பிறந்த தாலே -

எப்புதுமை செய்ததெனப் பின்னால் கண்டோம்!

இருக்கின்ற பன்னிரண்டு திங்க ளுக்குள்

இப்புகழைப் பிறிதொன்றும் அடைய வில்லை!

எழில்தமிழர் விழாவெடுக்க ஏற்ற தாக

ஒப்புரைக்க இயலாத உரைவோன் தன்னை

உலகுக்கு வழங்கியதே நிலவு போலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/34&oldid=1078585" இலிருந்து மீள்விக்கப்பட்டது