பக்கம்:அண்ணா காவியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

34

இருபதாம் நூற் றாண்டினிலே வாழ்ந்து சென்ற
இணையற்ற தலைவர்கள் சிலபேர் உள்ளார்;

ஒருவரும்நம் அண்ணாபோல் இதிலே தோன்றி
ஓங்குபுகழ் ஒளிவீசி நின்றாரல்லர்!

திருவதியும் இக்காலம் நாமும் வாழ்ந்தோம்;
திருமகனார் அருள் பெற்றோம்; என்னே பேறு!

பெருமதிப்பாய் அண்ணாவின் நூற்றாண் டென்று
பேசுவதில் தவறென்ன? அழைக்க லாமே!



இங்கர்சால், லிங்கனைப்போல், லெனினைப் போலே,
ஈடில்லா நெப்பொலியன், சர்ச்சில் போலச்,

சிங்கநிகர் அலெக்சாந்தர், சீச ரைப்போல்,
சீனத்தின் சன்யாட்சென், கமால்பாட் சாபோல்,

தங்கமெனத் தரணியெலாம் போற்று கின்ற
தயைமிகுந்த அடிகளாராம் காந்தி யைப்போல்

எங்கனுமே ஒப்புரைக்க இயலா வண்ணம்
இளமகவு பிறந்ததம்மா: தமிழன் மண்ணில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/36&oldid=1078590" இலிருந்து மீள்விக்கப்பட்டது