பக்கம்:அண்ணா காவியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வளர்ச்சிப் படலம்


வைதிகத்துத் தொன்முறையில் வளர்த்த தொத்தா
மைந்தரது முழுக்குடுமி வாரிப் பின்னி,

ஐதிகத்தில் வழுவாமல் நெற்றி மீதில்
அழகாகத் திருநாமம் இட்டுக், கண்ணில்

மைதீட்டிப், பூமுடித்துக், கடுக்கன் பூட்டி,
வண்டியிலே ஊர்வலமாய் அழைத்துச் சென்று

கைதொட்டு நெல்வின்மேல் எழுதச் செய்து
கல்வியினைப் பள்ளியிலே தொடங்கி வைத்தார்!


கூட்டத்தைக் கண்டாலே ஒதுங்கிச் செல்லும்
கூச்சமிகும் இயல்புகளைப் பெற்ற அண்ணா

நாட்டத்தைக் கற்பதிலே பதித்தார்! ஆசான்
நவில்வதனைக் கவனமுடன் செவிம டுத்துக்

கேட்டாலே போதும்! பின் வீட்டிற் குள்ளே
கிடுகிடுக்கப் படிப்பதெலாந் தேவை யில்லை!

மாட்டுவண்டி யைத்தாமே ஓட்டிச் சென்று
வள்ளலான பச்சையப்பர் பள்ளி சேர்வார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/37&oldid=1078597" இலிருந்து மீள்விக்கப்பட்டது