பக்கம்:அண்ணா காவியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

36

இயற்கையிலே அடக்கமிக உடையோ ராக
இடையூறில் லாமுறையில் தொடர்ச்சி யோடும்

உயர்நிலையின் வகுப்புவரை காஞ்சி மண்ணில்
ஒழுக்கமுடன் கற்றுவந்த அண்ணா என்றும்

அயர்வின்றிப் பயின்றிட்டார்; இளமை தொட்டே
அழகுதவழ் இசைசுத்துக்-கலையில் ஆர்வம்;

துயர்விலக்கும் முத்தமிழின் துறைக ளின்பால்
தொய்வில்லாப் பற்றுதலைக் கொண்டி ருந்தார்!



குடகுமலை உச்சியிலே தோன்றிக் கீழே
குதித்தோடி இழிந்துவரும் பொன்னி யாறோ

உடனடியாய் அகலமாவ தில்லை யன்றோ?
உளங்கவரும் சிற்றருவி யாகத் தானே

நடனமிட்டு நகர்ந்துவரும்! அத்தன்மைபோல்,

நம்குலத்தை விளங்கவைக்க வந்த அண்ணா

கடமையிலே கருத்தாகக் கற்றா ரேனும்
காஞ்சியிலே தனித்திறமை காட்ட வில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/38&oldid=1078602" இலிருந்து மீள்விக்கப்பட்டது