பக்கம்:அண்ணா காவியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வளர்ச்சிப் படலம்
37

குடித்தனத்தைச் சிக்கனமாய் நடத்தி வந்த
குடும்பத்தைச் சார்ந்தவர்தாம் எனவே அண்ணா,

நடுத்தரத்தார் நிலைக்கேற்பச் சிரமத் தூடே
நாள் கடத்திப், பள்ளிவாழ்வை ஒருவா றாக

முடித்துவிட்டார் வெற்றியுடன்! தங்கள் பிள்ளை
முன்னேற்றம் கண்ணுற்ற தொத்தா, மேலும்

அடுத்திவரைக் கல்லூரிப் படிப்பிற் காக
அனுப்பிடலாம் சென்னைக்கே எனநி னைத்தார்!




இறுதிநிலை வகுப்புதன்னைக் கடப்ப தற்கே
இருமுறைகள் தவறிவிட்ட அண்ணா, தங்கள்

வறுமைநிலை உணர்ந்ததனால் மேற் படிப்பு
வாய்க்காதென் றஞ்சியதால் நகர மன்றில்

பொறுமையுடன் எழுத்தராகப் பணிபுரிந்தார்:
பொறுக்காத தொத்தா, பிற் படுத்தப் பட்டோர்

பெறுமரிய சலுகைதனைக் கேட்டறிந்து,
பெருமகிழ்வு பூண்டவராய் முன்னே சென்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/39&oldid=1078606" இலிருந்து மீள்விக்கப்பட்டது