பக்கம்:அண்ணா காவியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பயிற்சிப் படலம்


எல்லாருங் கல்விகற்குஞ் சமவாய்ப் பெய்தி
ஏழையரும் முன்னேற வேண்டு மென்றால்...

இல்லாதார் இல்லத்திற் பிறந்த மக்கள்
எளிமையினால் இயலவில்லை என்ப தன்றி,

நல்லவிதம் பள்ளிகளில் இடமும் பெற்று
நயந்தபடித் தடையின்றி அறிவு மாந்திச்

செல்வரது மக்களைப்போல் சிறப்பு மிக்க
செழுமையினை அடைவதுதான் தேவுை யன்றோ?



அந்நாளில் அந்நிலையை ஓர்ந்த தாலே
அனைவர்க்குங் கட்டணமில் லாத கல்வி

முன்னிற்க வகைசெய்தார்; ஆட்சி பீடம்
முந்திவரத் தந்தவரம் இதுதான் அன்றோ?

தம்நாளில் தாமுணர்ந்த கொடுமை முற்றும்
தகர்த்திடவே முடிவெடுத்தார் அறிஞர் அண்ண

பின்னிலைமை சீர்படவே அவர்தம் சொந்த
பிற்பட்ட ஏழ்மைநிலை தூண்டிற் றன்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/43&oldid=1078614" இலிருந்து மீள்விக்கப்பட்டது