பக்கம்:அண்ணா காவியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

46

வந்திருக்கும் நோக்கத்தை மறந்து விட்டு,
மனம்போன போக்கெல்லாம் செல்வ தோடு,

சிந்தைமகிழ் வெய்துதற்குத் திரையரங்கில்...
சிற்றுண்டி விடுதிகளில் செலவு செய்து,

எந்தவிதப் பொதுத்திறனும் வளர்த்தி டாமல்
எப்படியும் தேர்வுகளை நடத்தா வண்ணம்

வெந்துயரம் மிகுவேலை நிறுத்த மென்று
வீணாக்கும் தீச்செயலை அண்ணா நாடார்!



கற்பதெலாந் தேர்வெழுதி வெற்றி பெற்றுக்
கடப்பதற்கே எனஎண்ணி மாணாக் கர்கள்

அற்பமான நோக்கோடு பயில்வ தாலே
அறிவுதனைப் பெருக்குகின்ற கருத்தே இன்றிச்

சொற்பமான புள்ளிகளை வாங்கி விட்டுத்
தொடர்வதுதான் வாடிக்கை! இவ்வாறன்றிக்

கற்பதெனில் கற்பவற்றைக் கசடு நீங்கக்
கற்றதோடு, கற்றவழி நின்றார் அண்ணா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/48&oldid=1078673" இலிருந்து மீள்விக்கப்பட்டது