பக்கம்:அண்ணா காவியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அய்யா ஆட்கொண்ட படலம்



53

நூற்றுக்கு மூன்றுபேரா யிருந்த வர்கள்

நுடங்காமல் மேல்வாழ்வை அமைத்துக் கொண்டு,

சோற்றுக்கும் திண்டாட விட்டு விட்டார்:

சொந்தநாட்டுப் பெரும்பான்மை மக்கள் கூட்டம்

ஏற்றுக்கொண் டின்னலிலே உழன்று வந்தார்;

ஏமாற்றுக் காரரிங்கே பிழைத்து நின்றார்!

மாற்றிவிடத் துணிவின்றி மலைத்தி ருந்த

மாக்கொடுமை தனைத்தவிர்க்கப் பெரியார் வந்தார்!


முரண்பட்ட புதுக்கருத்தை வெளிப்படுத்தி,

மூடமதிப் பழங்கொள்கை யாவும் தாக்கி,

அரண்செய்த சாத்திரங்கள், சம்பிர தாயம்,

ஆண்டவனின் கட்டளைகள் எல்லாம் வீணாய்ப்

பரண்மீது தூக்கியெறிந் தகற்றி விட்டுப்,

பைந்தமிழர் விழித்தெழவே வழிகள் கூறிச்,

சரண்அடையும் பிற்போக்குக் கொள்கை சாடிச்

சன்மார்க்கம் தந்தைவழி உரைத்தார் அண்ணா!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/55&oldid=1078716" இலிருந்து மீள்விக்கப்பட்டது