பக்கம்:அண்ணா காவியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அண்ணர் காவியம்


நாவலராம் பாரதியார் பசும லைவாழ்
நம்சோம சுந்தரரும் வாதம் செய்ய

ஆவலுடன் முன்வந்தார்! அண்ணா வைத்த
அறிவுத்தீ பொசுக்கியதால் ஒதுங்கிச் சென்றார்!

சேவலைப்போல் சிலிர்த்துவந்த சொல்லின் செல்வர்
சேதுப்பிள் ளையவர்கள் சிந்தை நோவக்

காவலர்எம் அண்ணாமுன் தோற்க நேர்ந்து
கடிதகன்றார்! இவையிரண்டும் வரலா றன்றோ!




செந்தமிழுக் கித்தனைதான் சிறப்பு முண்டோ?
செம்மையாகக் கருத்துகளை விளக்கு தற்கே

அந்தமிகும் அடுக்குச்சொல் தொடர்ந்து பெய்தே :அணிமோனை விரவிவர எழுதல் ஆமோ!

விந்தையுடன் வீரத்தை வாள்மு னைபோல்
வெடுக்கென்று தைத்திடவும் செருக லாமோ?

சொந்தமுடன் இந்நடையைத் தமதாய் ஆக்கிச்
சொக்க வைத்த அண்ணாவைப் புகழார் யாரே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/64&oldid=1078990" இலிருந்து மீள்விக்கப்பட்டது