பக்கம்:அண்ணா காவியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எழுதுகோல் வேந்தன்
63


செய்யுளைப்போல் மனப்பாடம் செய்து வைத்துச் :சிந்தையிலே இருந்துதற்கும் எளிமை யாக

மெய்யுரைகள் தீட்டிவந்தார் அண்ணா! அன்று :மேன்மையுடன் ஏடுகளில் சமைத்துத் தந்த

நெய்யுணவு வாயெல்லாம் மணக்கச் செய்யும்!
நிமிர்ந்துநின்று தமிழ்நாட்டின் எழுத்தா ளர்கள்

அய்யய்யோ என்றலற, இடிமு ழக்கம்
அடிக்கடிதான் வெடித்துவரத் தொடுத்தார் அண்ணன்!




தென்னாட்டில் எந்நாளும் காணா வண்ணம்
தீவிரமாய்ப் புத்தெழுச்சி பாய்ந்த தாலே,

பொன்னான கல்விபெறும் மாணாக் கர்கள்
புதுமையாகத் தமிழுணர்வும், இனவு ணர்வும்,

முன்னாளில் இல்லாத மூடக் கொள்கை
முறித்திடுமோர் அறிவுணர்வும் மூண்டு தோன்ற,

அன்னாரின் எழுத்தாலே ஈர்க்கப் பட்டார்;
அண்ணாவை வழிகாட்டி யாகக் கொண்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/65&oldid=1078991" இலிருந்து மீள்விக்கப்பட்டது