பக்கம்:அண்ணா காவியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அண்ணா காவியம்


வெடிகுண்டாய் முழக்கமிடும் அருமை நண்பர்
வெகுளியான சனார்த்தனமும்; பெரியா ரின்பால்

அடிநாளில் அந்தரங்க உதவி யாளர்
அமைதியுள்ள கசேந்திரனும்; குடந்தை தன்னில்

கொடிஉயர்த்தி மாணவர்கள் கழகங் கண்ட
கூர்மைதவ மணிராசன் கருணா னந்தம்...

படிப்புவிட்டுப் பகுத்தறிவுப் பாதை சென்றார்!
பண்புடையார் சத்தியேந்திரன்! அண்ணா பின்னால்




கரம்பற்றிச் சிறுவனாகத் தொடர்ந்து சென்று,
கதைகேட்டும், தின்பண்டம் பெற்றுத் தின்றும்

உரம்பெற்ற சம்பத்தோ அய்யா வுக்கே
உடன்பிறந்த மூத்தாரின் மூத்த பிள்ளை!

வரம்பெற்ற வாலிபர்க்குப் படிப்பில் நாட்டம்
வரவில்லை! அண்ணாவின் முயற்சி யாலே

தரம்பெற்ற திருப்பத்தூர் சாமி நாய்டு
தாம்பெற்ற சுலோசனாவை மணந்து கொண்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/70&oldid=1079005" இலிருந்து மீள்விக்கப்பட்டது