பக்கம்:அண்ணா காவியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகிழ்த்தது விடிவெள்ளி
77


கன்னடமும் களிதெலுங்கும் கேர ளம்வாழ்
கவின்மலையா ளமும்மற்றுந் துளுவும் எங்கள்

தென்னகத்தில் தமிழினின்று பிறந்த வைதாம்;
திராவிடத்து மொழிக்குடும்பம் சேர்ந்த வைதாம்;

நன்னிலையில் இவையிணைந்த கூட்டு நாடே .
நாம்விரும்பும் திராவிடமாம்! இந்நாட்டிற்குத்

தன்னிகரில் வரலாறும், நில நூற் சான்றும்,
தனிப்பண்பும். நாகரிகம் யாவும் உண்டாம்!




இந்தவிதத் தமிழினத்தார் எதனால் இந்நாள்
இந்தியாவின் பிறபகுதிக் கார ரோடு

சொந்தமுடன் வாழ்வது? நம் சோறு பண்பு,
சொல்லாட்சி எல்லாமே வேறே அன்றோ?

இந்திமொழி ஆதிக்கம் என்றும் நம்மை
இழிவுசெய்யும், அடிமையாக்கும், தமிழைக்கொல்லும்!

விந்தியத்தின் தெற்கிருப்போர் மனித ரென்றே
விந்தைமிகும் வடநாட்டர் நினைப்பதில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/79&oldid=1079488" இலிருந்து மீள்விக்கப்பட்டது