பக்கம்:அண்ணா காவியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

படியை நூறு ரூபாய் தந்து ஆர். டி. சீதாபதி அவர்கள் வாங்கிக் கொண்டார்.

திருவள்ளுவர் மன்றச் செயலாளர் டி. ஆர். பாலு அவர்கள் முன்னின்று நடத்திய அந்த விழாவுக்குத் திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர்களும், தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக விந்து சிறப்பித்தனர்.

அதே கலைவாணர் அரங்கத்தில்தான் 'அண்ணா காவியம்' நூலுக்கு அடுத்த திங்களே நடைபெற்றது இன்னொரு பாராட்டு விழா!

கவிஞர் பொன்னடியான் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தினர் அப்பாராட்டு விழாவை முன்னின்று நடத்தினர்.

அப்போது தமிழக அமைச்சராக இருந்த மாண்புமிகு என்.வி.நடராசன் அவர்கள், மாண்புமிகு மன்னை நாராயணசாமி அவர்கள், மாண்புமிகு அன்பில் தருமலிங்கம் அவர்கள், மாண்புமிகு இராசாங்கம் அவர்கள், சட்ட மேலவைத் துணைத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள், சட்டமன்றத் துணைத் தலைவர் நா. கணபதி அவர்கள் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரைகள் ஆற்றினர். தமிழறிஞர்கள் மகாவித்துவான் வேணுகோபாலப் பிள்ளை, பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி, டாக்டர் அவ்வை நடராசன் ஆகியோரும் அவ்விழாவில் பாராட்டுரை வழங்கினார்கள். அதன் பின்னர் அண்ணா காவியம்' பற்றிய திறனாய்வுக் கருத்தரங்கு ஒன்று சென்னையில் உள்ள 'கீதா ஒட்டல்' வளாகத்தில் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. தமிழக அரசில் அதிகாரியாக இருந்து ஆட்சி மொழிச் சொற்கள் பற்றிய நூல் ஒன்றைத் தீட்டியவரும் தஞ்சாவூர் -மானாங்கோரையைச் சார்ந்தவருமான தமிழறிஞர் கோ. முத்துப்பிள்ளை அவர்கள் அந்தக் கருத்தரங்குக்குத் தலைமை ஏற்றார்கள்.

உவமைக் கவிஞர் சுரதா, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பேராசிரியர் டாக்டர் மா. நன்னன், சிலம்பொலி செல்லப்பன், டாக்டர் அவ்வை நடராசன்,டாக்டர் இரா.குமாரவேலன் ஆகியோர் 'அண்ணா காவியம்' பற்றிய தங்கள் கருத்துக் கணிகளைப் பல்சுவை விருத்தாகப் பரிமாறினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/8&oldid=1158592" இலிருந்து மீள்விக்கப்பட்டது