பக்கம்:அண்ணா காவியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அண்ணா காவியம்


வெள்ளையரின் மேலாட்சி இருக்கும் போதே
விடுதலைக்குப் போராடும் போர்வை யின்கீழ்க்

கொள்ளையிட வடநாட்டு வணிக வேந்தர்
கும்பலாகத் திட்டமிட்டுத் தென்னாட் டாரைக்

கள்ளமாகச் சுரண்டுகிறார்: வேட்டைக் காடாய்க்
கருதுகிறார் திராவிடத்தைத்: தொழில்வ ளத்தில்

எள்ளளவும் முன்னேற்றம் தெற்கே யில்லை;
எல்லாமே வடபுலத்தில் வளர்ந்து வாழும்!




என்றுபல ஆதாரம் அடுக்க டுக்காய்
எடுத்துவைத்த அண்ணாவின் மேதை கண்டு...

'நன்று நன்று! நம்நிலைமை இஃதோ? என்றே
நாட்டுமக்கள் சிந்திக்கத் தலைப்பட் டார்கள்!

குன்றனைய இன்னலிலே நம்மைத் தள்ளிக்
குடிகெடுக்கச் சிலர்நினைத்தால், அதைத்த டுக்க

ஒன்றுபட்டுத் தென்னாட்டார் உணர்ந்தெ ழுந்தால்
உருப்படுவோம் என்பதெல்லாம் சொன்னார் அண்ணா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/80&oldid=1079489" இலிருந்து மீள்விக்கப்பட்டது