பக்கம்:அண்ணா காவியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அண்ணா காவியம்


திருப்தியாய் முடிந்த திருச்சிமா நாடு

திருப்பு முனையெனத் தீர்மா னம்பல

நிறைவேற் றியது! நீண்டநா ளாகக்

குறைவே இன்றிநம் கொள்கைப் படையினர்

தொண்டுகள் பற்பல தொடர்ந்தனர் எனினும்;

கண்டதும் உணரக் கவர்ச்சி மிக்கதாய்ச்

சீருடை அணிதல் சிறப்பெனக் கருதிக்

காருடை தரித்துக் கருமம் விளைத்திடக்

கருப்புச் சட்டைப் படையொன்று காண்போம்!

விருப்ப முடையோர் விரைந்து சேர்கெனத்

தந்தைஓர் அறிக்கை தந்தனர்! அண்ணனும்

சிந்தை மகிழ்வுறச் செப்பினர் சம்மதம்

கருணா னந்தமும் அருமை சம்பத்தும்

அமைப்பா ளர்களாய் ஆக்கினார் அய்யா!

இமைப்போ தேனும் இடைவெளி தராமல்

'குடிஅரசு' ஏட்டின் வெடியர சான

இடிக்குரல் கருணா நிதி முதல் உறுப்பினர்! </poem>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/82&oldid=1079493" இலிருந்து மீள்விக்கப்பட்டது