பக்கம்:அண்ணா காவியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முகிழ்த்தது விடிவெள்ளி
81

கருப்புச் சட்டை தரிப்பது கண்டு

தருப்பைப் படையினர் தளர்ந்தனர் நெஞ்சம்!'

'அரசியல் சமூகம் பொருளியல் அனைத்திலும்

சரிசம கிலையினைப் பெறும்வரை யாவரும்

இழிநிலை காட்டிட ஏற்ற சின்னமாய்

அழிவிலா தென்றுமே அணிவோம் கருப்புடை!'

என்றொரு புதுகெறி இயம்பினார் பெரியார்!

நன்றா காதென நவின்றார் அண்ணா!

வெள்ளுடை தரிப்போன் குள்ள நரியென

உள்ளம் சினந்திட உரைத்தார் பெரியார்:

'கருப்புடை அணியான் எவனையுங் கான

ஒருப்படேன்' என்றார், விருப்பம் மிகுதியால்!

'எல்லா நேரமும் ஏனோ கருப்புடை?

தொல்லையோ டன்றி நல்லது மாகா!

தேவையோ டணிந்தால் சேவையை மதிப்பார்!'

எனுமொரு கருத்தை முனகினார் அண்ணா..

இந்த வகையில் தந்தை தனயன்

உறவில் கீறல் சிறிதாய் வீழ்ந்ததே!

அ.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/83&oldid=1079494" இலிருந்து மீள்விக்கப்பட்டது