பக்கம்:அண்ணா காவியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கூத்தாடிய படலம்
83

மூத்ததமிழ், காலத்தால்! ஞாலம் ஆண்ட
மூவேந்தர் பாராட்டப் புலவர் கூடி

யாத்த தமிழ்! எழிலோடு மூன்று சங்கம்...
இயலென்றும், இசையென்றும், இரண்டும் சேர்ந்த

கூத்தென்றும் மூன்றுவகைத் தரம்பி ரித்தே
கொண்டாடச் சிறந்ததமிழ்! முற்றுங் கற்றே

'ஆத்தாடி! இவர் யார்?' என் றேவி யக்க
அண்ணாவும் கூத்தாடி ஆனார் அன்று!




படித்தவர்கள் நாடகத்தில் வேடம் போட்டால்
பண்பல்ல என்றுரைக்கும் பண்டை நாளில்...

இடித்துரைத்த இழிசொற்கள் எள்ளித் தள்ளி...
இளைஞருக்கு வழிகாட்டக், கலைகள் வாழ,

அடித்தளமிட் டார்.அண்ணா! காஞ்சி மண்ணில் :அமைத்தனரே திராவிட நடிகர் சங்கம்!

வெடித்தெழுந்த நல்லுணர்வால், சமுதாயத்தின்
வினாக்குறிபோல் தீட்டினரே நாடகங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/85&oldid=1079498" இலிருந்து மீள்விக்கப்பட்டது