பக்கம்:அண்ணா காவியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அண்ணா காவியம்


சந்திரோத யம் என்ற நாட கத்தில்
சமுதாயச் சிக்கலெலாம் விண்டு ரைத்தார்!

எந்தவிதம் பணக்காரர், ஆதி னத்தார்
ஏழையிரை வதைக்கின்றார் என்ப தெல்லாம்

சிந்தனைக்கு விருந்தாக்கிப் படைத்துக் காட்டிச்
சிறப்பாக மூன்றுவித வேடந் தாங்கி

வந்தனரே, சுழற்காற்றாய்த் தமிழ்நா டெங்கும்! :வரவேற்றுச் சிரமீதில் வைத்தோம் அன்றே!



சந்த்ரமோகன் அல்லது சிவாஜி கண்ட
இந்துராஜ்யம் சரித்திரத்தின் தக்க சான்று!

விந்தையுடன் அண்ணாவும் காகபட்டர்
வேடமேந்தி ஆரியத்தின் ஆண வத்தைத்...

தந்திரமாய் மன்னவரை, வீரர் தம்மைத்
தாள்பணியச் செய்தவொரு சாக சத்தைச்...

செந்தமிழர் மனமுருகச் சித்தி ரித்தார்;
சீரான தொழில்நடிகர் வியப்பி லாழ்ந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/86&oldid=1079501" இலிருந்து மீள்விக்கப்பட்டது