பக்கம்:அண்ணா காவியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கூத்தாடிய படலம்
85

இசைபாடி நடிக்கவல்ல இராம சாமி
ஏற்றமுறக், குழுவினர்கள் வாட்டம் நீங்க,

வசைபாடும் வைதிகரின் வாய டக்க
வரைந்திட்டார் ஓர் இரவு, வேலைக் காரி

அசைபோடும் மாடுகள் போல் பழைமை தன்னை
அரைத்துவந்த நிலைமாற்றி விட்டார் அண்ணா!

விசையோடும் எழுச்சியுற்ற தமிழ கத்தில்
விரைவாகப் புத்துணர்ச்சி பரவுக் கண்டோம்.




பேச்சாலும் எழுத்தாலும் நூறு நாட்கள்
பெரியதொரு கருத்தினையே புரிய வைத்தால்...

பூச்சாலே ஒப்பனையால் வேடம் மாற்றும்
புதிதான நாடகத்தால் இரண்டே நாளில்

மூச்சுவிடத் திணறுகின்ற முதியோர் கூட
முழுக்கருத்தும் புரியுமாறு செய்தல் கூடும்!

ஏச்சாலே நமையடக்கப் பார்த்தோர் கூட
இவ்வழியில் மிகமுயன்றார்; தோற்றார் அன்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/87&oldid=1079503" இலிருந்து மீள்விக்கப்பட்டது