பக்கம்:அண்ணா காவியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

மறுபடியும் 'அண்ணா காவியம்'பற்றிய திறனாய்வு கருத்தரங்கு ஒன்று சென்னை-கோகுல் ஒட்டல் வளாகத்தில் பொலிவோடு நிகழ்ந்தேறியது.

தி. மு. கழக முன்னணித் தலைவர்களுள் ஒருவரான நீலநாராயணன் அவர்களும், 'பசும் பொன் ஃபைன் ஆர்ட்ஸ்' கலை நிறுவனத்தின் சார்பில் பி. கே. முத்து ராமலிங்கம் (சீரணி) அவர்களும் அந்தக் கருத்தரங்கை முன்னின்று நடத்தினர்.

உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் அதற்குத் தலைமையேற்றார். பேராசிரியர் மா.கி. தசரதன், டாக்டர் மெ. சுந்தரம், சிலம்பொலி செல்லப்பன், டி. ஜி. நாராயணசாமி, எஸ். நல்லரசு, வர்கீஸ், கரந்தை கணேசன், சண்முக வடிவேலு, நா. முத்துக்குமாரசாமி ஆகியோர் தங்கள் சிந்தனை முத்துக்களைச் சீரிய முறையில் எடுத்து வைத்தனர்.

தஞ்சையில் இராமநாதன் மன்றத்தில் தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தினர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு விழா எடுத்தபோது-இந்த 'அண்ணா காவியம்’ பட்டி மன்ற விழாவையும் 17.5.75 அன்று நடத்தினர்.

திரு. துறவி இளங்கோவன் (சட்டமன்ற உறுப்பினர்) அவர்களும் ஏனைய பாசமிகு தோழர்களான எஸ். பெத்தண்ணன் (தஞ்சை நகராட்சித் தலைவர்), எஸ். நடராசன் (சட்டமன்ற உறுப்பினர்) பி. எஸ். தங்கமுத்து, ஏ. வி. பதி, டி. கே. கோவிந்தன், சுல்தான், வீரப்பிள்ளை ஆகியோரும் ஆர்வத்துடன் விழா ஏற்பாடுகளை மேற் கொண்டனர்.

அந்தப் பட்டிமன்ற விழாவுக்கு அப்போது அமைச்ச ராக இருந்த மன்னை நாராயணசாமி அவர்கள் முன்னிலை ஏற்றிருந்தார். தமிழ்நாடு சட்ட மேலவைத் துணைத் தலைவராக இருந்த சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள் தலைமை தாங்கினார்.

பட்டிமன்ற தலைப்பு : "அண்ணா காவியத்தில் விஞ்சி நிற்பது அண்ணாவின் சமுதாய உணர்வா? அரசியல் உணர்வா?" என்பதாகும்.

'அரசியல் உணர்வே' என்னும் அணியின் தலைவர்: புலவர் சி. முருகையன் (சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள். கவிஞர் தொல்காப்பியன், கவிஞர் முத்துராமலிங்கம் இருவரும் அவரை ஆதரித்து வாதிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/9&oldid=1459276" இலிருந்து மீள்விக்கப்பட்டது