பக்கம்:அண்ணா காவியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கீறல் விழுந்த காதை


"மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும்

மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்!"

ஏடுகளில் படித்ததுண்டா இதுபோல் முன்னர்?

இயம்பியவர் பாரதிதா சன்ந மக்குச்

சூடுவரச், சொரணை பெற, மானம், வெட்கம்,

சுயமரியா தையுணர்ச்சி தோன்ற-அந்நாள்

வீடுகளில் புரட்சிவிளக் கேற்றி வைத்து

வெளிச்சத்தைக் காட்டியவர் கவிஞர் தாமே?



அக்கவிஞர் நம்பக்கம் இருப்பு தென்றால்...

அறிவுலகம் செய்தபெரும் பேறே அன்றோ?

தக்கவண்ணம் பாராட்டிப் பெருமை செய்தால்

தமிழுலகு பயன்பெறுமென் றெண்ணிச் சில்லோர்

சிக்கனமாய்க் குழுவொன்றை அமைத்தார்! ஆங்குத் :திருவாரூர் இராமனுடன், சலகை கண்ணன்

மக்கலிட்டுப் பார்த்தார்கள் முடியா மற்போய்

முறையிட்டார் அண்ணனிடம் வெற்றி பெற்றார்!

</poem>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/90&oldid=1079515" இலிருந்து மீள்விக்கப்பட்டது