பக்கம்:அண்ணா காவியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கீறல் விழுந்த காதை
89


சென்னையிலே விழாவொன்றை எடுத்து, மக்கள் :திரண்டுவரச், சிறப்பாகக் கவிஞ ருக்குச்

சொன்னபடிப் பொற்கிழியொன் றளித்தார் அண்ணா!
சோம்பேறிப் பழக்கமென வைதார் அய்யா!

சின்னவர்கள் செயலென்று சொல்லி அண்ணா
சீர்திருத்தக் கவிஞரையே வியப்பில் ஆழ்த்தி,

மன்னவர்கள் முன்னாளில் வழங்கி னாற்போல்
மகத்தான பாராட்டை நல்கி விட்டார்!




கருவூரில் நெசவாளர் போராட் டத்தில்
கலவரமும் தீவைப்பும் நிகழ்ந்த போழ்து...

பெருமுள்ளம் படைத்தஅந்நாள் ஆட்சி யாளர்
பிடித்தடைத்தார் சிறைக்குள்ளே கழகத் தாரை!

மருவற்றார் என்பதெலாம் மெய்ப்ப டுத்த,
வழக்குமன்றம் செல்வதற்கு முனைந்தார் அண்ணா!

அருவிருப்பம் பெரியாருக்கில்லை யாக;
அண்ணாவே நிதிதிரட்டி, வழக்கில் வென்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/91&oldid=1079682" இலிருந்து மீள்விக்கப்பட்டது