பக்கம்:அண்ணா காவியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அண்ணா காவியம்


ஆயிரத்தொள் ளாயிரத்து நாற்பத் தேழில்
ஆங்கிலேயன் இந்தியாவைக் கூறு போட்டுப்,,,

'பாயிரங்கள் புகழ்ந்தேத்தும் பார தத்தைப்
பார்த்துக்கொள் வீர்' என்று திரும்பிப் போனான்.

தாயிருகை விலங்கொடிந்த திருநாள் என்றே
தாங்கவொனா உவகையிலே திளைத்தார் மக்கள்!

'சே! யிதுதான் துக்கநாளாம்" என்றார் அய்யா!
'சீரியநாள்' என்றண்ணா மகிழ்ச்சி பூண்டார்!




'அய்யாசொல் சரி'யெனவோர் அணிவ குப்பாம்;
அதிலேதான் கலைஞர் இடம் பெற்றுக் கொண்டார்!

'மெய்யாக அண்ணாசொல் மேலாம்' என்று
வேறுசிலர்: நாவலரோ அதிலே சேர்ந்தார்!.

எய்யாத அம்புகளாம் ஏட்டின் மூலம்
இருகுழுவும் பேனாவால் தாக்கிக் கொண்டார்!

பொய்யான சுதந்திரத்திற் காசு அன்று
போர்க்கோலம் நாமெ.தற்கோ பூண்டோம் வீணே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/92&oldid=1079684" இலிருந்து மீள்விக்கப்பட்டது