பக்கம்:அண்ணா காவியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கீறல் விழுந்த காதை
91


<poem> களிப்படைய முடியாத சூழல் கண்டோர்

கழகத்தின் சார்புடைய இதழில் எல்லாம்

வெளிப்படையாய் ஈரணிகள் அமைந்த தீங்கை

விலக்கிடவோ வழியின்றித் திகைத்து நின்றார்!

துளிப்பகையும் மலையளவாய்த் தோன்று மாறு

தூத்துக்குடி மாநாட்டைத் தவிர்த்தார் அண்ணா!

இளிப்போர்க்கும் இடங்கொடுக்கா வண்ணம், அய்யா

இறங்கிவந்தே, அண்ணனுக்கும் அமைதி தந்தார்!



ஈரோட்டில் அண்ணாவின் தலைமை யின்கீழ்

ஏற்பாடு செய்தார்ஓர் தனிமா நாடே!

சீரோடு நடப்பதற்குத் தாமே நேரில்

செயல்புரிந்தார்! அண்ணாவை ஊர்வ லத்தில்

யாரோடும் அமர்த்தாமல் தனியாய் வைத்தே,

இளைஞர்போல் தொண்டரொடும் நடந்தா ர்அய்ய

தேரோடும் திருவிழாதான்! திருவி. க.வும்

'திராவிடத்தைப் பெறஉழைப்போம்' என்றார்

ஆங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/93&oldid=1079685" இலிருந்து மீள்விக்கப்பட்டது