பக்கம்:அண்ணா காவியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணிர்த் துளிகள்


காலமெல்லாம் தன்மான முரசம் ஆர்த்துக்
கடுஞ்சூறா வளிப்பயணம் மேற்கொண் டெங்கும்

ஓலமிட்டுக் கொள்கைசொன்ன அஞ்சா நெஞ்சன்...
உருக்குலைந்த நோயாளி அழகர் சாமி...

சீலமுடன் ஈரோட்டில் இறுதிப் பேச்சாய்ச்
செயலழிந்து வீழ்ந்தபோதில், உதவி நல்க

ஏலவில்லை அய்யாவால்! அண்ணா தந்தார்!
இதைக்கண்ட தொண்டரெல்லாம் மனங்கு லைந்தார்!



கனல்கக்கப் பேசியவன் இரத்தம் கக்கிக்
கதியற்றுச் சாவதென்றால், நம்மைப் போன்றோர்

புனல்கக்கும் இருகண்ணும் குளமாய் மாறப்
போக்கற்றுச் செல்வதற்கோ உழைத்தோம்?' என்று

சினம்காட்டி-அன்பழகன், கலைஞர், மற்றும்
சிற்றரசும் அய்யாவின் சீற்றம் பெற்றார்!

இனங்கண்டு கொண்டோமென் றண்ணா கூறி,
எல்லாரும் அமைதிபெறச் செய்து விட்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/96&oldid=1079690" இலிருந்து மீள்விக்கப்பட்டது