பக்கம்:அண்ணா காவியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணீர்த் துளிகள்
95


கோவையில் முத்தமிழ் மாநாடுகூட்டியே

நாவொலி சுவைக்கும் நம்நண்பர் முழங்கினர்.

அங்கே பேசிய அருமை அண்ணா

சங்கேத மொழியில் தந்தையை நோக்கித்

திருப்புகழ் மணக்கும் திருவண் ணாமலை

விருப்புடன் சென்ற விங்தைதான் என்னே?

புகையும் எரிமலை போலநா ளெல்லாம்

பகையினைக் கக்கும் தகை.இரா சாசியாம்

இந்திய நாட்டின் இணையிலாத் தலைவரைச்

சந்தித்த தேனோ? சாற்றுக! என்றார்.

சொந்தப் பொறுப்பினில் சென்றேன். விவரம்

தந்திட மாட்டேன் என்றனர் தந்தை!



ஈட்டி பாய்ந்ததோ இதயத் துள்ளே?

கேட்ட அண்ணன் கிறக்கம் எய்தினார்!

திடுக்குற் றார்கள் திராவிடத் தோழர்!

நடுக்குற் றனரே நற்றமிழ் நாட்டினர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/97&oldid=1079693" இலிருந்து மீள்விக்கப்பட்டது