பக்கம்:அண்ணா காவியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அண்ணா காவியம்


வாழ்க பெரியார், வாழ்கென முழங்கி...

வாழ்வைப் பணயமாய் வைத்துஅடி வயிறு

வலிக்கக் கத்தினால் சிலிர்க்குமே மேனி!

ஒலிக்க உரிமை உடையவர், உண்மை

அறிய உரிமை அற்றவர் ஆயினோம்!

சரி"யென அண்ணா சமாளித் திருக்கையில்......



எரிமலை வெடித்தது! இருநிலம் பிளந்தது!

திரைகடல் பொங்கிடப் பெரும்புயல் சுழன்றது!

பெரியார், தமக்குப் பின்னர் வாரிசாய்

அறிவித்த பெயரால் அதிர்ந்தது தமிழகம்!



கணமும் அகலாது கருத்துடன் பேணிப்

பணிவிடை புரிந்த மணியம்மை யாரே

அறக்கட் டளைகள் சிறக்கத் திரட்டிய

பொருளுக் கேற்ற பொறுப்பாள ராவார்!

அண்ணாவும் அல்லராம்! அண்ணனின் மைந்தரில்

மூத்த சம்பத்தும் ஏற்றவர் அல்லராம்!

வணங்கத் தக்க வயதினர் பெரியார்

மணம்புரி வாராம் மணியம்மை யாரை!



ஏடுக ளுக்கோர் இனித்திடும் செய்தியாய்

நாடு முற்றும் நன்குபரப் பினரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/98&oldid=1079694" இலிருந்து மீள்விக்கப்பட்டது