பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அண்ணா—சில நினைவுகள்


“சரி. சேலம் மாநாட்டுக்குப் பின்னே நாம் எதிர் பார்த்த இப்படிப்பட்ட எழுச்சி உண்டாகியிருக்குது! வீரமணி வந்திருக்குதா, இங்கே?” கேட்டார்.

“வராமெ இருக்குமா? இந்த ஆர் லே மாநாட்டு வேலையெல்லாம் கழகத்தோழர் இராமலிங்கத்தோட முயற்சிதானே. வீரமணி அவருக்கு உதவியா, ஒடியாடி தொண்டு செய்யுது. இங்கே அது வெறும் பேச்சாளரா வரல்லியே—அவுங்க ‘வாத்தியார்’ திராவிடமணி நடத்துறதாச்சே.”

சிறுவன் வீரமணியை அண்ணா சேலம் மாநாட்டிலேயே சந்தித்துப் பாராட்டிவிட்டார். இப்போது உள்ள ஒரு இசைக் கலைஞருடன் வீரமணியை ஒப்பிடு வது சாலப் பொருத்தம். அவர்தான் மாண்டலின் பூ. சீனிவாசன், கர்நாடக இசையை இந்தச் சிறு கருவியில் இசைக்க முடியும் என இதற்கு முன் யாரும் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. அதே போல வீரமணியும் தன் பத்தாவது வயதிலேயே ஓர் எதிர் நீச்சல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இன்றளவும் அதிலேயே நிலைத்திருப்பது, மாபெரும் அற்புதமாகும். இசையுலகில் சிதம்பரம் ஜெயராமன், வீணை பாலச்சந்தர், பாலமுரளி கிருஷ்ணா, புல்லாங்குழல் டி. ஆர். மாலி, மிருதங்கம் டி. கே. மூர்த்தி ஆகியோர் பால்யத்திலேயே திறமை சாலிகள் எனினும், முன்னோர் சென்ற வழியிலேயே தான் இவர்களும் சென்றனர். புதுமையோ புரட்சியோ செய்ய வில்லை. அதைச் செய்த ஒரே சிறுவன் சீனிவாஸ். அஃதே போன்ற புரட்சிச் செய்த சிறுவன் வீரமணி ஒருவரே என்பதை நாம் மறத்தலாகாது! வேறு எவரும் இத் துறையில் இவருக்கு நிகரானோர் இலர்!

1945 சனவரித் திங்கள் இந்த மாநாட்டை முன்னின்று நடத்திய புதுப்பேட்டை இராமலிங்கம் பின்னர் சென்னை யருகே குடியேறி, இன்றைக்கும் அனகாபுத்தூர் இராம