பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அண்ணா—சில நினைவுகள்


புரட்சிக்கவிஞர் இந்த மாணவர் மாநாட்டுக்காக எழுதி அனுப்பிய வாழ்த்துப்பாடலை-க. அன்பழகன் படித்து, எழுச்சியைத் தோற்றுவித்தார். நிகரில்லாத அந்த அகவற்பா என்றும் குன்றா இளமையுடன் நமது நினைவில் நிற்குமே :

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது, சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் கடுங்கப்
புலியெனச் செயல்செயப் புறப்படு வெளியே!

என்று தொடங்கி...

இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!

என்றெல்லாம் ஒடுமே, நமது குருதியில் வெப்பத்தை ஏற்றி!

“ஏன் அண்ணா! எப்படியோ சம்பத்தையும் படிக்க விடாமே பண்ணிட்டீங்க, தலைவராக்கி! இண்ட்டர் மீடியட் போதுமா? அப்படியானா படிப்பிலே எனக்கு ஒரு ஜோடி கிடைச்சிட்டாரு!” என்று நான் சொன்னது மகிழ்வால் அல்ல. பெரியாரின் மகனாக எங்களால் எண்ணிப் பார்க்கப்பட்டவர், ஒரு பட்டதாரியாக விளங்க வேண்டும் என்ற ஆசையால்! அந்த ஆசை நிறைவேற வில்லையே!

“படிப்பு அவனுக்கு ஒரு குறை இல்லேய்யா. நீ பாரு, நல்லா Shine பண்ணுவான் சம்பத்!” என்றார் நம்பிக்கையுடன் அண்ணா. வடார்க்காடு மாவட்டம் திருப்பத்தூர் வழக்கறிஞர் சாமி நாயுடு நம் இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் மகன் கஜேந்திரன் பெரியாரிடம் தன்ரிச் செயலராக இருந்தபோது, சம்பத்தின் தமக்கையார் ஈ. வெ. கி. மிராண்டாவை விரும்பி மணந்தார். கஜேந்திரன் திருமணத்தின்போது, அவர் தங்கை சுலோச்சனாவைச் சந்தித்த சம்பத், அவரை மணக்க விரும்பி, அண்ணாவின்