பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

93


ஆதரவை நாடினார். ஏனென்றால், பெரியார், சம்பத்துக்குத், தன் தங்கை மகள் எஸ். ஆர். காந்தியை மண முடிக்க எண்ணியிருந்தார். ஆனால், அண்ணாவின் ஒத்துழைப்பினால்தான் சுலோச்சனாவை சம்பத் மணக்க முடிந்தது! என்றும் சம்பத் தன்னுடனிருப்பாரென அண்ணா நம்பியதில் தவறில்லையே!

அந்தோ! அண்ணாவின் நம்பிக்கை இப்படி நசித்து நாசமாகிப் போகுமென யார் எதிர் நோக்கினோம்? 1960 61—ல் “திருவாளர் அண்ணாத்துரை” என்று நாக்கூசாமல் சொல்லிவிட்டாரே சம்பத்? அவர் வீழ்ச்சிக்குத் தானே அமைத்துக் கொண்ட சறுக்கு மேடையாக இந்த மரியாதைக் குறைவான பேச்சுதானே விளங்கிற்று.

அண்ணா அவர்கள் தமது வாயால் இந்தக் கருத்தைக் கூறக் கேட்டேனே நான், பின்னாட்களில்!