பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அண்ணா-சில நினைவுகள்


அதேபோல் இருவரும் புறப்பட்டு விரைவாகச் சென்று, சிதம்பரம் அடையும் போது ஏறக்குறைய நள்ளிரவு நேரம். அப்போதும் வில்லாளன் வீட்டிலில்லை. நெடுகிலும் விசாரித்துக்கொண்டே போனோம். ஏதோ ஒரு சிற்றுாரில் அகப்பட்டார். எங்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும், ஒரளவு புரிந்துகொண்டு, புன்னகை புரிந்தார். தனியே கூப்பிட்டு விவரம் சொன்னோம்.

“சரி இருங்கள், உங்கள் காரிலேயே வந்துவிடுகிறேன். சிதம்பரத்தில் என் வீட்டுக்குப் போகலாம்” என்றார். சென்றோம். தந்தோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, “ரங்கா! என்ன சொல்றே. இப்பவே திரும்பலாமா?” என்று ஒட்டுநரைக் கேட்டேன். ரங்கன் தயார்!

காலையில் அண்ணா எழுந்திருக்கும் முன்பு சென்னை சேர்ந்தாகிவிட்டது! தூங்குகின்ற அண்ணாவை எழுப்பி விவரம் சொல்ல வேண்டுமே?

அண்ணாவை எழுப்புவது ஒரு சுவையான அனுபவம். ஒரு சிலருக்கே அந்த உரிமை இருந்தது. அந்தச் சிலரில் நான் ஒருவன்!

அண்ணா துரங்கும்போது, பெரும்பாலும் மேலே சட்டையோ, அவர் சொந்தமாகத் தைத்துப் போட்டுக் கொள்கிற கையில்லாத அந்த பனியனோ, இராது; வெற்றுடம்புதான்! நல்ல குறட்டை விடுவார்கள். அருகில் நின்று “அண்ணா! அண்ணா!” என மெதுவாக அழைப்பேன்; பயன் இருக்காது! உரக்க “அண்ணா! அண்ணா!"—அழைத்தால் சிறிது அசைவு தென்படும். அவ்வளவுதான், கண்விழிக்க மாட்டார்கள்!

பத்து நிமிடம் பொறுத்து “அண்ணா” என்று பலமாக அழைத்துக் கொண்டே, மெல்ல உடல் மீது கைவைப்பேன். உணர்வின் உந்துதலால் கண் மலர்வார்கள். “எழுந்திருங்க அண்ணா! நேரமாச்சே?” — “ஒரு five minutes பொறுய்யா"