பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அண்ணா-சில நினைவுகள்


எண்ணத்தை எழிலுருவில் தந்திடும் ஆற்றலதை
ஏற்ற முறையில் பெற்றுள்ள கவிஞர் அலர்.
கவிதை, சிந்தனைக்குத் தேனளிக்கும்.
அத்தேனே
மாமருந்துமாகிவிடும்
சீர் இழந்து தவிக்கின்ற தமிழ்ச் சமுதாயம் தனக்கும்.

இடையிலே ஒரிடத்தில் ‘கவிதை’ என்பதற்கு அண்ணா கூறும் இலக்கணம், கவிஞர் என்போர் அனைவரும் சிந்தை யிற் பதிக்க வேண்டிய சொற்களாகும் :

அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்,
எத்தனை அழகம்மா! என்று
அறிந்தோரையே மகிழவைக்கும் அருங்கலையே,
கவிதையாகும்.

இதற்கும் பிறகு, என் கவிதைகளின் தனிச்சீர்மை என்ன என்பதையும் அண்ணா விண்டுரைக்கின்றார் :-

அணிதெரியும் என்பதற்காய் ஆக்கித் தரப்பட்ட
வணிகப் பொருள் அல்ல அவர் கவிதை சமூகப்
பிணிபோக்கும் மருந்தளிக்கின்றார்,
கவிதைத் துளி வடிவில்.
பருகிட இனிப்பதது; உட்சென்றதும்
பிணிபோக்கிப் புதுத்தெம்பு தருவதது.

இறுதியாக முற்றாய்ப்பு வரிகள் கட்டாணி முத்துகள் :

இக்கவிதை நூலினைத் தந்தவர் என் நண்பர்.
பெருமை அடைகின்றேன்
இத்தகைய நண்பர்தனைப் பெற்றவன்
நான் என்பதனால்.