பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பத்தாயிரம் ரூபாயில் ஓவியக் காட்சி

“இந்த விருகம்பாக்கம் மாநாட்டுலே ஒனக்குத் தனியா ஒரு பொறுப்பு குடுக்கப்போறேன். நீ இப்பவே இங்க வந்து தங்கிடு. நீ வழக்கமா செய்ற வேலைகளைத் தவிர இது! ஒன்னயே முழுக்க நம்பி ஒப்படைக்கிறேன். இரண்டு பாயிண்ட் இதிலெ. ஒண்ணு, சிக்கனமா செய்யணும். ரெண்டு, தினமும் எங்கிட்ட கன்சல்ட் பண்ணிக்கிட்டபிறகு, முடிக்கணும்! என்ன கருணானந்தம், தயாரா?” என்று கேட்கிறார்கள் அண்ணா; நுங்கம் பாக்கம் இல்லத்தில்தான்.

“என்னண்ணா, சஸ்பென்சாகப் பேசுறீங்க! நீங்க. எது சொன்னாலும் தயார்தான். (அரசாங்க) வேலையிலே இருந்து கிட்டே, பகுதி நேரம் கட்சிப் பணி செய்யலாம்னு நீங்க சொன்னதாலேதானே, 1946-ல் நான் வேலக்கே. போனேன். எப்போதுமே நான் பின்வாங்கியதில்லியே அண்ணா?” எனச் சற்றுத் தழுதழுத்த குரலில் பேசினேன்.

“உன்மேல எனக்குச் சந்தேகமிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேனே. விஷயம் அதில்லே. கோயமுத்துரர் மாநாட்டிலே நம்ம...... யை நம்பி (அண்ணா, அவர் பெயரைச் சொன்னார்கள். பெரியவர், போகட்டும்? நான் அவர் பெயரைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை; இப்போது அவர் உயிரோடுமில்லை.) இந்த வேலையை ஒப்படைச்சேன். ஒரு லட்சம் ரூபாய் செலவு கணக்குக் காண்பிச்சாரே தவிர, உருப்படியா ஏதுமே செய்யலே. வேறொண்ணுமில்லேய்யா, உனக்குப் பிடிச்ச வேலைதான். எக்சிபிஷன் அமைக்கிறது. இந்தத் தடவை ஒரு பத்தாயிரம் ரூபாயிலேயே முடிச்சுடனும். உனக்கு,