பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொத்தானை மாற்றிப் போட்ட புஷ்கோட்

ந்த முறை அண்ணா திருவிழந்தூரில் தங்கியிருந்தார்கள். இடம் ஏற்பாடு, புதியவர் குடவாயில் சி. கிருஷ்ண மூர்த்தி. ஒரு அம்பாசிடர் காரும் அவரிடமிருந்தது. போக வர அவர் உதவியாயிருந்தார். இது 1951ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட முதல் மாநாடு, மாயவரம் நகரம், கூறைநாடு திரும்ஞ்சன வீதியில் பந்தலிட்டு நடந்தபோது. மாவட்டச் செயலாளரான கே. கே. நீலமேகம் வரவேற்புக் குழுத் தலைவர். உள்ளூர் பிரமுகர் ஆர். பழனிச்சாமி செயலாளர். அனுபவமில்லாத தால் 17 ரூபாய்தான் மாநாட்டில் மீதியாயிற்று. சாப்பாடு மட்டும் பிரமாதம் எல்லாருக்கும்!

இந்த மாநாட்டின் அமைப்புப் பணிகளில் உள்ளூரி விருந்தாலும், எனக்கு முக்கிய பங்கில்லை. காரணம், நான் அப்போது அய்யாவிடமும் தொடர்போடு இருந்தவன். அதனால், தலைவர்களோடு வெறும் பார்வையாளராகவே மாநாட்டுக்குச் சென்றேன். இந்த மாநாடு பலவகையிலும் மறக்கவொண்ணாதது. என் மூத்த மகள் ராணி, பிறந்திருந்த நேரம். அதற்காக என் துணைவியார் மன்னார்குடி சென்றுவிட்டதால், என் வீட்டில் யாரையும் தலைவர்களை அழைத்துத் தங்கவைக்க முடியவில்லை. கலைஞர் புளுரசி நோயால் அவதிப்பட்டுத் திருவாரூரில் படுக்கையிலிருந்தார். புதியவரான கவிஞர் கண்ணதாசன், சென்னையிலிருந்து அரங்கண்ணலோடு ரயிலில் முதல் வகுப்பில் வந்தபோது, அந்தப் பெட்டி Hot Axle ஆகித் தீப்பிடித்து விட்டது. அதனால் தனது