பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

123


தான் இண்ணக்கி சிவாஜி போடlங்களாமே?” என்று குறும்பாகக் கேட்டேன். “இது இரண்டாவது நாடகமல்லவா!” என்று பதில் சொல்லிச் சரித்திரகால சிவாஜி ஒல்லியானவன் என்ற வரலாற்று. உண்மையைத் தகர்த் தெறிந்தார் சம்பத்!

அண்ணா புஷ்கோட் அணிந்துகொண்டு, மேலே அங்கவஸ்திரம் தரித்து, வழக்கமான பரபரப்புடன் போய்க் காரில் ஏறிக்கொள்ளவும், நாங்கள் தொடர்ந்து ஒடினோம், வண்டியில் ஏற. மாநாட்டுப் பந்தல் வந்ததும், அண்ணா மேடைக்குச் செல்ல, நாங்கள் அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்காக, எதிரே முன்வரிசையில் தரையில் அமர்ந்திருந்தோம்.

அண்ணா மேடையில் நாற்காலியில் வீற்றிருந்தபோது எங்களுக்குப் புலப்படாத ஒரு குறை, அவர்கள் சொற். பொழிவாற்ற எழுந்துவந்து மைக் முன்னர் நின்றபோது தெரிந்துவிட்டது! அதாவது, புதிதாக புஷ்கோட்-அதிலும் இரவல்-அணியும்போது, அண்ணா முதல் பொத்தானை இரண்டாவது துளையில் மாட்டி, அதுபோலவே மற்றவற்றையும் தள்ளித் தள்ளிப் போட்டுக்கொண்டதால், சட்டையின் முன்புறத்தில் ஒருபகுதி ஏற்ற்மாகவும் இன்னொரு பகுதி இறக்கமாகவும் தோன்றியதால் எங்களுக் கெல்லாம் அடக்கமாட்டாத சிரிப்பு! கை தட்டிக் கேலி செய்ய, அது தனியிடம் அல்ல! பேசத் தொடங்கிய பின் மேடைக்குப் போய்ச் சொல்வதும் நாகரிகமல்ல. எனவே சிரமப்பட்டு வாயை மூடி, எங்கள் கிண்டலை வெளிக் காட்டாமல் சேர்த்துவைத்திருந்து, மாநாடு முடிந்தவுடன், ஒடிச் சென்று அண்ணாவிடம் சொல்லி, ஒயாச் சிரிப்பில் ஆழ்ந்தோம்.

பெரியாரின் வழியிலேயே அண்ணாவும், தமது ஆடை அலங்காரங்களில் எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை என்பது நாடறிந்த உண்மை என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒர் எடுத்துக்காட்டாகும்.