பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கழகத்தொண்டன் அலுவலரான கதை

ல்லறத்தை வெறுத்து ஒதுக்கிவிட்டுக் காவி கமண்டலம் தாடி மீசையோடு நாடோடியாய்ப் போன ஒருவன், மீண்டும் துறவறத்தைத் துறந்து, இல்லறத்தை ஏற்றுக்கொண்ட கதைதான் என் கதையும். அரைக்கிணறு தாண்டியது. போல, இண்ட்டர்மீடியட் தேர்வு எழுதி விட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடராமல் விடுத்துத், திராவிடர் இயக்கக் கொள்கைகளின்பால் ஏற்பட்ட காதல் வெறியால் ஈரோடு சென்று, அங்கே தங்க நேரிட்டது, அண்ணா. அவர்களால் ஈர்க்கப்பட்ட காரணந்தான். பின்னர், கழகப் பணிகளில் முழு நேரம் மூழ்கி நிற்காமல், பகுதி நேரப் பணியாற்றினாலே போதும் என்ற முடிவு மேற்கொண்டு, மத்திய அரசு ஊழியராக மாறியதும் அண்ணா அவர்களின் தூண்டுதலால்தான்! எப்படி?

திருச்சி புத்தூர் மைதானத்தில் 1945 செப்டம்பரில் இரு மாநாடுகள். 29-ஆம் நாள் நீதிக்கட்சி மாநாடு அய்யா அவர்கள் தலைமையில், இதன் வரவேற்புக் குழுத் தலைவர் தி. பொ. வேதாசலம். மறுநாள் சுயமரியாதை இயக்க - மாநாடு திருவெற்றியூர் T. சண்முகம் தலைமையில், இதன்: வரவேற்புக் குழுத்தலைவர் அண்ணா.

மாநாட்டு வேலைகளை முன்கூட்டியே நேரில் கண் காணிக்க, ஒருவாரம். இருக்கும்போதே பெரியார் திருச்சி வந்துவிட்டார். பரிவாரங்களாகிய மணியம்மையார், தவமணி இராசன், நான்-உடன் வந்தோம். டாக்டர், மதுரம் பங்களாவில் தங்கல். அண்ணாவும் இருந்தார்கள். பந்தல் அலங்காரங்கள் முடிந்துவிட்டன, மாநாட்டுக்கு,